ஆப்நகரம்

இது அவுட்டா? நாட் அவுட்டா? ஆஸி., கிரிக்கெட்டில் அபூர்வ குளறுபடி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் அம்பயர்களுக்கு சவால் விடும் விநோத சம்பவம் நடந்ததுள்ளது.

TNN 9 May 2017, 7:29 pm
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் அம்பயர்களுக்கு சவால் விடும் விநோத சம்பவம் நடந்ததுள்ளது.
Samayam Tamil bails remain despite unearthed stump
இது அவுட்டா? நாட் அவுட்டா? ஆஸி., கிரிக்கெட்டில் அபூர்வ குளறுபடி!


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மிட் இயர் அசோசியேஷன் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில், வீசப்பட்ட பந்தை பேட்ஸ்மேன் கோட்டை விட்டுள்ளார். நேரே ஸ்டெம்பை பதம்பார்த்த பந்து நடு ஸ்டெம்பை மட்டும் பிடுங்கி எறிந்துவிட்டது. ஆனால், பெல்ஸ்கள் இரண்டும் விழாமல், மற்ற இரு ஸ்டெம்புகளின் உதவியுடன் அப்படியே இருந்தன.

பேட்ஸ்மேன் போல்ட் ஆனதாக அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், இது அவுட்டா? நாட் அவுட்டா? அம்பயர் குழப்பமான சூழலில் சரியான முடிவெடுத்தாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் விதிமுறைகளின் படி அம்பயர் அவுட் கொடுத்தது மிகச்சரியானதே. விதி எண் 28ல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், பைல்ஸ்களில் ஒன்றாவது விழுந்தாலும் ஸ்டெம்புகளில் ஒன்றாவது பிடுங்கப்பட்டுவிட்டாலும் போல்ட் அவுட் அளிக்கலாம். இதைக் கருத்தில் கொண்டே அம்பயர் நல்ல முடிவை எடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்