ஆப்நகரம்

கண்ணாடி கதவை உடைத்து வசமாக சிக்கிய சகிப் அல் ஹசன் - ஐசிசி தண்டனை நிச்சயம்

இலங்கைக்கு எதிரான போட்டி முடிவில் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் சகிப் அல் ஹசன் டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடி உடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2018, 8:28 pm
கொழும்பு : இலங்கைக்கு எதிரான போட்டி முடிவில் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் சகிப் அல் ஹசன் டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடி உடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil shakib


இலங்கையின் சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. கடைசி ஓவரில் இலங்கை வீரர் தொடர்ந்து இருமுறை தோள்பட்டை அளவிற்கு உயர பந்து வீசினார். ஆனால் அம்பயர் நோ-பால் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் வங்கதேச கேப்டன் சகிப்-அல் ஹசன் போதும் விளையாடியது வாருங்கள் என்ற பாணியில் கையை அசைத்தார். மேலும் இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட முயன்ற நூருல் ஹசன், சகிப்-அல் ஹசன் ஆகியோருக்கு சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஐசிசி சார்பில் ஒரு அபராத புள்ளி விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க : வீரர்கள் மோதலால் பரபரப்பான இலங்கை - வங்கதேச கிரிக்கெட் - டிரெஸ்சிங் ரூம் கண்ணாடிகள் உடைப்பு

பிரச்னையில் முடிந்த இலங்கை - வங்கதேச போட்டி - வளைத்து, வளைத்து அபராதம் போட்ட ஐசிசி

மீண்டும் சிக்குவாரா சகிப் :
இந்நிலையில் போட்டி முடிந்து டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற சகிப் அல் ஹசன் போட்டியில் இருந்த கடுப்பா ல் டிரெஸ்ஸிங் அறை கண்ணாடி கதவை வேகமாக இழுத்துள்ளார். இதனால் கண்ணாடி உடைந்ததாக வங்கதேச வீரர்களுக்கு உணவு கொண்டு சென்ற சமையல் பரிமாறுபவர்கள் போட்டி நிர்வாகிகளிடம் தகவல் அளித்துள்ளனர்.


மேலும் படிக்க : எதுக்காக கோபப்பட்டேன் - போட்டியை முடிந்ததும் கூலாக பேசிய சகிப் அல் ஹசன்

இது முதல் கட்ட அறிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி விடியோ காட்சிகள் கொண்டு ஐசிசி விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்