ஆப்நகரம்

டி20 உலக கோப்பை: இந்தியா பேட்டிங்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது

TNN 23 Mar 2016, 7:32 pm
பெங்களூரு: வங்கதேசத்திற்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
Samayam Tamil bangladesh won the toss and india to bat first
டி20 உலக கோப்பை: இந்தியா பேட்டிங்


இன்று பெங்களூருவில் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை லீக் போட்டி நப்டக்கவுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மஷ்ரபே மொர்டாசா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் அதிக ரன் குவிப்பு இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை வங்கதேச அணியில் தமீம் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, இந்த போட்டியில் வங்கதேசத்தில் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோழி, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடிய போது, பல முறை பெங்களூருவில் சிறப்பாக விளையாடியதால், இன்றும் சிறப்பாக பங்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்