ஆப்நகரம்

கங்குலிக்கு இன்னும் ஏன் இந்த விளம்பரம் : பிசிசிஐ!

பிசிசிஐ நிர்வாகியாக இருந்துக்கொண்டு இன்னும் ஏன் விளம்பர ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் கங்குலியை பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

TOI Sports 11 Apr 2017, 5:34 pm
இந்தூர்: பிசிசிஐ நிர்வாகியாக இருந்துக்கொண்டு இன்னும் ஏன் விளம்பர ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் கங்குலியை பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
Samayam Tamil bcci official asks why sourav ganguly is endorsing brands
கங்குலிக்கு இன்னும் ஏன் இந்த விளம்பரம் : பிசிசிஐ!


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் போர்டில் (பிசிசிஐ) மாற்றங்கள் தேவை என லோதா குழு அளித்த பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட் அமல்படுத்தியது.

இதை செய்ய தவறிய முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் உட்பட பல நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நீக்கியது. இந்நிலையில், லோதா குழு பரிந்துரைகளின் படி, பிசிசிஐ உட்பட அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் உள்ளவர்கள் யாரும் வேறு ஒப்பந்தகளில் ஈடுபடக்கூடாது.

ஆனால் தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள கங்குலி, ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியின் பங்குதாரராக உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ இது பிசிசிஐ.,க்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. பிசிசிஐ பொறுப்பில் உள்ள ஒருவர் இது போன்ற ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும். மாறாக ஒரே நேரத்தில் இரண்டு படகில் பயணிக்க நினைப்பது தவறு,’ என்றார்.


INDORE: It's difficult to keep Sourav Ganguly out of news. It has emerged that the former India skipper is pitted against former BCCI president N Srinivasan in the race to represent the BCCI at an important ICC meet in Dubai on April 24.

அடுத்த செய்தி

டிரெண்டிங்