ஆப்நகரம்

India 2021-22: ‘இந்திய அணி போட்டிகள்’ வெளியானது அட்டவணை…4 அணிகளுடன் போட்டி: பழி தீர்க்க செம்ம சந்தர்ப்பம்!

2021-22ஆம் ஆண்டு இந்தியா பங்கேற்கும் உள்நாட்டு தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2021, 3:49 pm
சமீப காலமாகவே உலகின் பலமிக்க கிரிக்கெட் அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. ஆஸ்திரேலிய மண், இங்கிலாந்து மண் என அனைத்திலும் மிரட்டலாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவித்து, பிரமிக்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட அணி, சமீபத்தில் ஒரேயொருமுறை மட்டுமே பெரிய தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. அது, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிதான். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றது.
Samayam Tamil விராட் கோலி


இதனால், நியூசிலாந்து அணியுடன் கிரிக்கெட் தொடர் விளையாடி, இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. ஆம், 2021-22ஆம் ஆண்டி இந்தியா பங்கேற்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நியூசிலாந்துக்கு எதிரான டி20, டெஸட் தொடரும் இடம்பெற்றுள்ளது.

இவர பாத்தா பொறாமையா இருக்குங்க…இவர் அளவுக்கு யாரும் இல்லை: கேப்டனை தாறுமாறாக புகழ்ந்த சேவாக்!

இந்தியா உள்நாட்டுத் தொடர் அட்டவணை:

இந்தியா vs நியூசிலாந்து (2021)


முதல் டி20 – நவம்பர் 17, ஜெய்ப்பூர்

2ஆவது டி20 – நவம்பர் 19, ராஞ்சி

3ஆவது டி20 – நவம்பர் 21, கொல்கத்தா


முதல் டெஸ்ட் – நவம்பர் 25 – 29, கான்பூர்

2ஆவது டெஸ்ட் – டிசம்பர் 3 - 7 மும்பை


இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் (2022)


முதல் ஒருநாள் – பிப்ரவரி 6, அகமதாபாத்

2ஆவது ஒருநாள் – பிப்ரவரி 9, ஜெய்ப்பூர்

3ஆவது ஒருநாள் – பிப்ரவரி 12, கொல்கத்தா


முதல் டி20 – பிப்ரவரி 15, கட்டாக்

2ஆவது டி20 – பிப்ரவரி 18, விசாகப்பட்டினம்

3ஆவது டி20 – பிப்ரவரி 20, திருவனந்தபுரம்


இந்தியா vs இலங்கை (2022)


முதல் டெஸ்ட் – பிப்ரவரி 25 – மார்ச் 1, பெங்களூர்

2ஆவது டெஸ்ட் – மார்ச் 5 - 9, மொகாலி


முதல் டி20 – மார்ச் 13, மொகாலி

2ஆவது டி20 – மார்ச் 15, தர்மசாலா

3ஆவது டி20 – மார்ச் 18, லக்னோ


இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2022)

முதல் டி20 – ஜூன் 9, சென்னை

2ஆவது டி20 – ஜூன் 12, பெங்களூர்

3ஆவது டி20 – ஜூன் 14, நாக்பூர்

4ஆவது டி20 – ஜூன் 16, ராஜ்கோட்

5ஆவது டி20 – ஜூன் 19, டெல்லி

அடுத்த செய்தி

டிரெண்டிங்