ஆப்நகரம்

‘கோலி, ரோஹித், தினேஷுக்கு இடமில்லை?’…பிசிசிஐ அதிரடி முடிவு: இனி இவர்தான் முழுநேர கேப்டன்..விபரம் இதோ!

கோலி, ரோஹித்துக்கு இனி அணியில் இடம் கொடுக்க கூடாது என பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 29 Nov 2022, 12:13 pm
கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.
Samayam Tamil ரோஹித் ஷர்மா, விராட் கோலி


அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.

ரோஹித் மீது அதிருப்தி:

இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோஹித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

புது கேப்டன்:

இதனால் ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு மட்டும் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டி20 அணிக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ மீட்டிங்:


இதுகுறித்து விவாதிக்க பிசிசிஐ நிர்வாகிகள் மீண்டும் இன்று காலை நடைபெற்றது. அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு இப்போதிருந்தே தயாராகும் நோக்கில், மூத்த வீரர்களை நீக்கிவிட்டு இனி டி20 அணியில் இளம் வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால், இனி டி20 அணிகளில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது எனவும் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓய்வு அறிவிக்க கூடாது:

அதுமட்டுமல்ல, டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாது என்பதால் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவிக்க கூடாது, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் டி20 அணிக்கு அழைக்கப்படுவீர்கள் என ரோஹித், கோலியிடம் அந்த மீட்டிங்கில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச தேச தொடர் முடிந்த உடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோரை அழைத்து பேச பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த மீட்டிங் முடிந்த உடனே டி20 அணிக்கு ஹார்திக் பாண்டியா முழுநேர கேப்டனாக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்