ஆப்நகரம்

கும்ப்ளே சாதாரண வீரர்தான்: சர்ச்சையைக் கிளப்பிய பிசிசிஐ

பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அணில் கும்ப்ளேவை அவமதிக்கும் விதமாக பிசிசிஐ நடந்துகொண்டிருக்கிறது.

TOI Contributor 17 Oct 2017, 5:57 pm
பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அணில் கும்ப்ளேவை அவமதிக்கும் விதமாக பிசிசிஐ நடந்துகொண்டிருக்கிறது.
Samayam Tamil bcci slammed over anil kumble birthday post
கும்ப்ளே சாதாரண வீரர்தான்: சர்ச்சையைக் கிளப்பிய பிசிசிஐ


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருமான அணில் கும்ப்ளே இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் பதவி விலகினார். கேப்டன் விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் அவர் பதவி விலகியதாவும் சர்ச்சை எழுந்தது. இதன் எதிரொலியாக அடுத்த பயிற்சியாளர் பதவியை கோலியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் கும்ப்ளேக்கு வாழ்த்து தெரிவித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், "முன்னாள் இந்திய அணி வீரர் அணில் கும்ப்ளேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இப்பதிவுடன் கும்ப்ளே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தது. இந்த பதிவு காலை 10.56 க்கு வெளியிடப்பட்டது.



இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தவரான அணில் கும்ப்ளேயை வெறும் 'முன்னாள் வீரர்' என்று பிசிசிஐ குறிப்பிட்டதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து பதில் அளித்தனர். இதன் விளைவாக, பிசிசிஐ அந்த பதிவையே டெலிட் செய்துவிட்டது.

பின்னர், மீண்டும் 11.30 மணிக்கு புதிய பதிவில் வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ, "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்டர். அணில் கும்ப்ளேக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு #Legend, #HappyBirthdayJumbo ஆகிய ஹேஷ்டேக்களை இணைத்துள்ளது. Here's wishing a very happy birthday to former #TeamIndia Captain Mr. Anil Kumble #Legend #HappyBirthdayJumbo pic.twitter.com/uX52m8yYif — BCCI (@BCCI) October 17, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்