ஆப்நகரம்

சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்குள் புது கோச் ரெடி : பிசிசிஐ

சாம்பியன்ஸ் டிராபி முடிவதர்குள், இந்திய அணிக்கு புது பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

TOI Sports 7 Jun 2017, 7:27 pm
சாம்பியன்ஸ் டிராபி முடிவதர்குள், இந்திய அணிக்கு புது பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Samayam Tamil bcci to announce new indian head coach before the champions trophy ends
சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்குள் புது கோச் ரெடி : பிசிசிஐ


தற்போதைய இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக அனில் கும்ளே உள்ளார். இவரின் பதவி காலம் ஜூன் 23ம் தேதியோடு நிறைவு பெறுகின்றது.
கும்ளே பயிற்சியாளராக பதவியேற்ற பின் தொடர்ந்து இந்திய அணி பல டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்தது. இருப்பினும் இந்திய கேப்டன் கோலிக்கும் - பயிற்சியாளர் கும்ளேக்கும் இடையே பிரச்னை உள்ளது என கூறப்பட்டதால், அவரின் பதவி காலத்தை நீட்டிக்காமல், வேறு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முயற்சித்து வருகின்றது.

6 பயிற்சியாளர்கள்:
அடுத்த பயிற்சியாளர் போட்டியில் கும்ளே, சேவக், டாம் மோடி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் தொட்ட கணேஷ் ஆகிய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதலாவதாக கும்ளேவின் விண்ணப்பத்தை பரிசீலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகிய 3 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவதற்குள் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் யார் என அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்