ஆப்நகரம்

‘சூப்பர் ஓவருக்கே’... ‘சூப்பர் ஓவர்’.... : புது விதியை அமல்படுத்தும் ஆஸி., கிரிக்கெட் போர்டு!

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனல், சர்ச்சையை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் புது விதியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2019, 4:08 pm
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், ஃபைனல் போட்டி ‘டை’யில் முடிந்தது.
Samayam Tamil Super Over


சூப்பர் ஓவர்...
இதையடுத்து போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் எட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் ‘டை’யாக, அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற ஒரே அடிப்படையில், உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது.

புது விதி
இதையடுத்து உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் போட்டியின் சூப்பர் ஓவரும் ‘டை’ ஆகும் பட்சத்தில், அதற்கு முடிவு எட்டும் வரை அடுத்தடுத்து சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்படும் புது விதியை அமல்படுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இரு தொடர்களிலும்...
இந்த புதுவிதியை ஆண்கள், பெண்கள் பிக் பாஷ் கிரிக்கெட் தொடர் என இரு தொடர்களிலும் அமல்படுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

உலகக்கோப்பைக்கு முன்பாக
இந்நிலையில் ஐசிசி.,யின் தலைமை அதிகாரி ஜெப் அலார்டைஸ் தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி, முன்னாள் இந்திய கேப்டன்கள் அனில் கும்ளே, ராகுல் டிராவிட், ஆண்டிரு ஸ்டிராஸ், மகிளா ஜெயவர்தனா ஷான் போலக் ஆகியோர் அடங்கிய குழு பவுண்டரி விதி குறித்த விவதாதத்தை வரும் 2020 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக முன்வைத்து விவாதம் நடத்தப்படும் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் வரும் 2020 அக்டோபர்- நவம்பர் மாதத்தில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்