ஆப்நகரம்

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை பெறும் வீரர்கள் யார்?

ஐபிஎல் 2019 வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படும் வாய்ப்புள்ள வீரர்கள் வரிசையில் சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, ஹெட்மயர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

Samayam Tamil 18 Dec 2018, 3:46 pm
ஐபிஎல் 2019 வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படும் வாய்ப்புள்ள வீரர்கள் வரிசையில் சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, ஹெட்மயர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
Samayam Tamil sam-curran_625x300_1527770027023


2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடக்கிறது. இன்று நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில் தேர்வு செய்து இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த மொத்தம் 346 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெறும். இவர்களில் 70 வீரர்கள் மட்டுமே வாங்கப்படுவார்கள். இந்த ஏலத்தில் முன்னிலையில் உள்ள வீரர்கள்…

சாம் கரண் - இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான இவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனைவரையும் வியக்க வைத்தார். 47 டி20 போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரது ஸ்ட்ரைக் ரேட் 118.90.
ஜானி பேர்ஸ்டோ - 2018ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர். இவரைத் தவிர கோலியும், ரோஹித்தும் மட்டுமே இந்த ஆண்டு இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
ஹெட்மயர் - வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரான இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினார். ஒரு போட்டியில் அதிரடியாக சதம் விளாசினார்.
இவர்கள் தவிர முஸ்தபிசுர் ரஹ்மான், மெக்கல்லம், ஜேசன் ராய், பின்ச், டேல் ஸ்டெயின் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் இந்திய அணி வீரர்களான முகமது ஷமி, அக்ஸர் படேல், யுவராஜ் சிங் ஆகியோரும் அதிக விலைக்கு வாங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஏல நிகழ்ச்சியை நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது. இந்த முறை அணிகளின் அதிகபட்ச சம்பள எல்லை 66 கோடி ரூபாயில் இருந்து ரூ.80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 82 கோடியாகவும் 85 கோடியாவும் அதிகரிக்கப்படும். அதே சமயத்தில் அணகளின் அதிகபட்ச வீரர்கள் எண்ணிக்கை 27 என்பதிலிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அணிகள் அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதற்கு முன் 9 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைக்க அணிகள் அனுமதிக்கப்பட்டன. இத்துடன் எல்லா அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தையும் உள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்