ஆப்நகரம்

பஞ்சாப்பை பஞ்சாக பறக்கவிட்ட டெல்லி!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

TOI Sports 15 Apr 2017, 9:44 pm
புதுடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil billings anderson lift daredevils to 188
பஞ்சாப்பை பஞ்சாக பறக்கவிட்ட டெல்லி!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. டெல்லியின் பிரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் 15வது லீக் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் ஸ்டோனிஸ்க்கு பதில் அதிரடி மன்னன் மார்கன் சேர்க்கப்பட்டார். இஷாந்த் சர்மாவுக்கு பதில் கேசி காரியப்பா இடம் பிடித்தார். டெல்லி அணியில் தாரேவுக்கு பதில் ஸ்ரேயாஷ் ஐயர் வாய்ப்பு பெற்றார்.

பில்லிங்ஸ் அதிரடி:
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு இம்முறை சத நாயகன் சாம்சன் (19) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் பில்லிங்ஸ் (55) அதிரடி அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின் வந்த கரண் நாயர் வழக்கம் போல ‘டக்’ அவுட்டானார். ஸ்ரேயாஷ் ஐயர் (22) நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

பண்ட் ஏமாற்றம்:
பின் வந்த இளம் வீரர் பண்ட் (15) சொதப்பலாக வெளியேறினார். கடைசி நேரத்தில் கோரி ஆண்டர்சன் அதிரடி காட்ட, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்