ஆப்நகரம்

BJP Candidate List 2019: சேவாக்கை தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பாஜக டக் அவுட்

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மன்னனாக திகழ்ந்தவர் விரேந்திர சேவாக். இவரின் அதிரடி பேட்டிங்கிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Samayam Tamil 15 Mar 2019, 7:46 pm
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மன்னனாக திகழ்ந்தவர் விரேந்திர சேவாக். இவரின் அதிரடி பேட்டிங்கிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
Samayam Tamil Sehwag


2015ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைப் பெற்ற சேவாக் தன் அதிரடி டிவிட்டுகள் மூலம் மக்களோடு கலந்திருந்தார்.

அவரை பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிகள் நடப்பதாக கடந்த மாதம் கூட செய்திகள் வெளியாகின. பிரபலம் மட்டுமில்லாமல், பலருக்கு மிகவும் பிடித்த வீரர் என்பதால் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட அல்லாத அவரை தேர்தலில் நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தன.

ஹரியானாவின் ரோஹ்தர் பகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸின் திபேந்திர சிங் ஹூடாவுக்கு எதிராக போட்டியிட வைக்க பாஜக சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அதில் சிக்காமல் சேவாக் சிக்ஸர் அடித்துள்ளார்.


அவர் தனது டுவிட்டரில் கூட, “2014 தேர்தலின் போது கூட, தான் தேர்தலில் போட்டியிடுவதாக வதந்தி பரவியது. ஆனால் அப்போதும் சரி, இப்போதும் சரி அதுபோன்ற எண்ணம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

இதனால் சேவாக் அதிரடி காட்டியதால் பாஜக டக் அவுட் ஆகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்