ஆப்நகரம்

இதுபோன்ற தமிழர்களால் தான் தோனிக்கே பெருமை! : எந்த வீரருக்கும் கிடைக்காத பெருமை

தோனி தனது 36 வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளுக்கு பல கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

TOI Sports 7 Jul 2017, 4:48 pm
தோனி தனது 36 வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளுக்கு பல கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Samayam Tamil blood donation camp for ms dhonis birthday by chennai super kings fans
இதுபோன்ற தமிழர்களால் தான் தோனிக்கே பெருமை! : எந்த வீரருக்கும் கிடைக்காத பெருமை


தோனி பெருமைபடும் சென்னை ரசிகர்கள்:
இதுவரை அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்களின் பிறந்த நாள் விழாவின் போது, அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள் தங்களின் தலைவரை பெருமைபடுத்தும் விதமாக நலத் திட்டப் பணிகளை செய்வது வழக்கம். போஸ்டர், பேனர் என வைப்பது வழக்கம்.

ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற பெருமையை எந்த ஒரு ரசிகனும் செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் தோனிக்கு உள்ள ரசிகர்கள் ஒரு முன்னுதாரனமாக திகழ்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்படத் தொடங்கியது முதல் தமிழ் நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அதிகம் விரும்பத்தக்க வீரராக தோனி உள்ளார்.

எங்க 'தல’ தோனிக்கு ‘ஹேப்பி பர்த் டே’: போஸ்டர் வைத்த சென்னை ரசிகர்கள்!




ரத்த தானம்:
இவரின் பிறந்தநாளான இன்று அவரை பெருமைப் படுத்தும் விதமாக, அவரது ரசிகர்கள் ரத்த தான முகாமுக்கு தயார் செய்து, ரத்த தானம் செய்து வருகின்றனர்.



இதுபோன்ற தமிழ் ரசிகர்களை கொண்ட தோனி தான் இவர்களைப் பார்த்து பெருமை பட வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்