ஆப்நகரம்

கிரிக்கெட் கடவுள் சச்சினை மிஞ்சுவாரா கிங் கோலி: பிரட் லீ கணிப்பு!

மும்பை: கிரிக்கெட் கடவுளாக ரசிகர்கள் கொண்டாடும் ஜாம்பவான் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Apr 2020, 5:50 pm
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவர் சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15921 ரன்கள், 51 சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் 18426 ரன்கள், 49 சதம் என இமயமலை போல ரன்கள் குவித்து சாதித்துள்ளார்.
Samayam Tamil விராட் கோலி -  சச்சின்


இவரின் சாதனைகளை இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி, கூடிய விரைவில் தகர்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரட் லீ கூறுகையில், “இந்திய ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடிக்க கூடிய திறமை, உடல் தகுதி, மனவலிமை என தேவையான அனைத்தும் கோலியிடம் உள்ளது.


கோலியிடம் திறமைக்கு பஞ்சமில்லை. உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். கடின போட்டிகள் , வீட்டை நீண்ட நாட்கள் பிரிந்து இருப்பது கோலியின் மனவலிமையை அதிகரிக்க செய்யும். தொடர்ந்து இந்த மூன்று விஷயங்களை கோலி தக்கவைத்து கொண்டால், இன்னும் 7 - 8 ஆண்டில் சச்சினின் சாதனையை முறியடிக்கலாம்” என்றார்.

இவர் எங்கயோ உச்சத்துல இருக்கார்...: உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்த வில்லியம்சன்!

மேலும் சிலர் கடவுளை மிஞ்ச முடியுமா என கேள்வி கேட்கின்றனர். இதற்கு பதில் அளித்த பிரட் லீ, “என்னைப் பொறுத்தவரையில் யாராவது ஒருவர் கடவுளை மிஞ்சித்தான் ஆகவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.

தூக்கி வீசிய சிஎஸ்கே... இவர் தான் காரணம்... எனக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி இருந்துச்சு... அஸ்வின் காட்டம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்