ஆப்நகரம்

Team India Sponsor: வரும் செப்டம்பர் முதல் புது ஜெர்சியில் ஜொலிக்க உள்ள இந்திய கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் பைஜூஸ் விளம்பரதாரராக உள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 9:20 pm
இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் பைஜூஸ் விளம்பரதாரராக உள்ளது.இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒருபுறம் இருக்க மற்றொரு பெரிய வருவாயாக விளம்பரதார்கள் உள்ளனர்.
Samayam Tamil Team India BYJUS


அந்த வகையில் இந்திய அணிக்கு தற்போது பிரபல மொபைல் நிறுவனமான ஒபோ விளம்பரதாரராக உள்ளது. ஒபோவின் விளம்பர ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

தமிழ் தலைவாஸ் ஒருபுள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி!

இந்நிலையில் 2019 செப்டம்பர் 5ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு கல்வி மற்றும் கற்றல் பயன்பாடு செயலியான பைஜூஸ் விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி:
இந்திய அணிக்கு இதுவரை விளம்பரதாரராக செயல்பட்டதற்கு ஒபோவும், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பைஜூஸ் அதிகாரிகள் இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார் தல தோனி!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ராகுல் ஜோஹிர் இரு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்