ஆப்நகரம்

மீண்டும் ரேங்கில் உச்சத்தை தொட்ட புஜாரா, ஜடேஜா - கோலியும் அபாரம்

இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய வீரர்களின் ரேங்கிங் உயர்ந்துள்ளது.

TOI Sports 28 Nov 2017, 5:27 pm
இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய வீரர்களின் ரேங்கிங் உயர்ந்துள்ளது.
Samayam Tamil cheteshwar pujara and ravindra jadeja gain big points in the latest icc test rankings
மீண்டும் ரேங்கில் உச்சத்தை தொட்ட புஜாரா, ஜடேஜா - கோலியும் அபாரம்


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

தரவரிசை முன்னேற்றம்:
முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா சொதப்பினாலும், அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி, பவுலிங்கும் சிறப்பாக செய்து வெற்றியை நெருங்கும் நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தது.

2வது டெஸ்ட்டில் அஸ்வின், ஜடேஜா என ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

பேட்டிங்கில் இந்தியாவின் முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா சதம் அடித்தனர், கோலி இரட்டை சதமடித்து அசத்தினார்.

இதையடுத்து தரவரிசையில் புஜாரா 2வது இடத்திற்கு முன்னேறினார். கோலிக்கு புள்ளிகள் அதிகரித்தாலும் 5வது இடத்திலேயே தொடர்கிறார்.

பவுலர்களில் ஜடேஜா 3வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்