ஆப்நகரம்

பிராட் ‘அவுட்’ வோக்ஸ் ‘இன்’!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்கவுள்ளார்.

TOI Sports 24 Nov 2016, 12:44 pm
மொஹாலி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்கவுள்ளார்.
Samayam Tamil chirs woakes likely to replace stuart broad for mohali test
பிராட் ‘அவுட்’ வோக்ஸ் ‘இன்’!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இந்திய அணி, 1 -0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், காயம் காரணமாக மொஹாலி டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்டுவர்ட் பிராட் தனது வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுத்திருந்தார்.

இருப்பினும் விசாகப்பட்டின டெஸ்ட் போட்டியில் சமாளித்து விளையாடிய பிராட், மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் பங்கேற்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்