ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் போட்டியாளர்களுக்கு பரிச்சை : பாஸ் ஆகப்போவது யார்?

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் இன்று நடைப்பெறுகின்றது.

TOI Sports 10 Jul 2017, 10:28 am
மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் இன்று நடைப்பெறுகின்றது.
Samayam Tamil coach selection ravi shastri in the box seat
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் போட்டியாளர்களுக்கு பரிச்சை : பாஸ் ஆகப்போவது யார்?


இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கும்ளேவுக்கும், இந்திய கேப்டன் கோலிக்கும் இடையே பனிப்போர் நடந்துள்ளது. இதன் காரணமாக என்னை ஆளவிடுங்கடா போதும் என கும்ளே தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகின்றது.

போட்டியாளர்கள்:
இந்தப் பதவிக்கு ரவிசாஸ்திரி, சேவக், டாம் மோடி, ரிச்சர்டு பைபஸ், பில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் தொட்ட கணேஷ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

நேர்காணல்:
இந்த 7 போட்டியாளர்களில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கும் நேர்காணலை, சச்சின், கங்குலி மற்றும் லக்‌ஷ்மண் ஆகிய மூவர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு செய்ய உள்ளது.

இவர்களின் பரிந்துரைப்படி, இவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்பார்கள்.

ரவிசாஸ்திரிக்கு வாய்ப்பு :
கோலிக்கு மிகவும் பிடித்த ரவிசாஸ்திரி இந்த தேர்வில் பாஸ் செய்து பயிற்சியாளராக வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே சென்ற ஆண்டு நடந்த இந்த தேர்வில் ரவிசாஸ்திரி போட்டியிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்