ஆப்நகரம்

இனி எவனையும் கேட்கப்போறது இல்ல: சிஏசி.,!

‘இனி பயிற்சியாளர் விஷயத்துல யாரும் மூக்கை நுழைக்க கூடாது,’ என கிரிக்கெட் ஆலோசனை குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

TOI Sports 23 Jun 2017, 7:29 pm
மும்பை: ‘இனி பயிற்சியாளர் விஷயத்துல யாரும் மூக்கை நுழைக்க கூடாது,’ என கிரிக்கெட் ஆலோசனை குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil cricket advisory committee to not consult virat kohli while appointing new coach
இனி எவனையும் கேட்கப்போறது இல்ல: சிஏசி.,!


இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய அணியில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. கோலி தனது ஸ்டைலுக்கு பயிற்சியாளர் தேவை என பிடிவாதமாக இருக்க, கும்ளே அவருக்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பினார்.

இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி இலங்கைக்கு செல்லும் முன், புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ.,யின் ஆலோசனைக்குழுவான சச்சின், கங்குலி, லட்சுமண் இனி யாரையும் இந்த விஷயத்தில் பேசவிடப்போவது இல்லை என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். இனி அவர்கள் யாரை கைக்காட்டுகிறார்களோ, பிடிக்குதோ, இல்லையே அவருடன் தான் கோலி தலைமையிலான இந்திய அணி காலத்தை ஒப்பேத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்