ஆப்நகரம்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க, சேவக் கொடுக்கும் ‘மாஸ்டர் பிளான்’!

இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடினால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அதிரடி வீரர் சேவக் ஐடியா கொடுத்துளார்.

TOI Sports 22 Nov 2017, 6:44 pm
புதுடெல்லி: இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடினால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அதிரடி வீரர் சேவக் ஐடியா கொடுத்துளார்.
Samayam Tamil cricket needs to grow to be an olympic sport virender sehwag
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க, சேவக் கொடுக்கும் ‘மாஸ்டர் பிளான்’!


சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலில் (ஐ.சி.சி.,) 105 நாடுகள் உறுப்பினராக உள்ளது. ஆனால் அதில் வெறும் 12 அணிகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1900ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. அதன்பின் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக் ஐடியா அளித்துள்ளார்.

இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கமுடியும். தற்போது ஐசிசி.,யில் 105 உறுப்பினர்கள் இருந்தும், 12 நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ’ என்றார்.

NEW DELHI: Former India opener Virender Sehwag feels cricket needs to be played in more countries if the game has to make its way into the Olympics

அடுத்த செய்தி

டிரெண்டிங்