ஆப்நகரம்

CSK: ஆப்கன் இளம் பௌலரை தட்டித் தூக்கிய சிஎஸ்கே…மும்பை வந்தடைந்தார்!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹாக் ஃபாரூகியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் பௌலராக தேர்ந்தெடுத்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2021, 11:46 am
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹாக் ஃபாரூகியை (20) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் பௌலராக தேர்ந்தெடுத்துள்ளது. சிஎஸ்கே அணி பயிற்சிக்காக மும்பையில் முகாமிட்டுள்ளது. ஃபாரூகியும் நேற்று ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பை புறப்பட்டுச் சென்று தற்போது சென்னை அணியுடன் இணைந்துள்ளார்.
Samayam Tamil ஃபஸல்ஹாக் ஃபாரூகி


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்வீட்:

இதுகுறித்து தற்போது ட்வீட் வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “ஃபஸல்ஹாக் ஃபாரூகியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் பௌலராக தேர்ந்தெடுத்துள்ளது” எனப் பதிவிட்டு ப்பாரூக்கியின் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளது.

ஃபாரூகி அனுபவம்:

இந்தியா, பாகிஸ்தான் இடையில் டி20 தொடர்? பாகிஸ்தான் நிர்வாகி சூசகம்!


ஃபாரூகி, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுகமானார். இதுவரை 12 முதல்தரப் போட்டிகள், 6 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார்.

தோனி பேட்டி:


ஐபிஎல் 13ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாகச் சொதப்பி முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடைசி லீக் போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி, “அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான அணியை உருவாக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

மினி ஏலம்:

இதனால், கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகளவில் இளம் வீரர்களை ஏலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி, சேத்தேஸ்வர் புஜாரா போன்றவர்களை ஏலம் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

ரெய்னா வருகை:


தற்போது, ஐபிஎல் 14ஆவது சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பங்கேற்பதற்காக, சுரேஷ் ரெய்னா நேற்று மும்பை சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் செய்திகள், சென்னை சூப்பர் கிங்ஸ், மகேந்திரசிங் தோனி, ஃபஸல்ஹாக் ஃபாரூகி, fazalhaq farooqi, Chennai super kings, mahendra singh dhoni, cricket news in tamil

அடுத்த செய்தி

டிரெண்டிங்