ஆப்நகரம்

வங்கதேசத்தை துவைத்து எடுத்த மில்லர்: அதிவேக டி20 சதம்!

வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிவேக சதத்தை பதிவு செய்தார்.

TNN 29 Oct 2017, 7:59 pm
வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
Samayam Tamil david miller smashes fastest ever t20 ton
வங்கதேசத்தை துவைத்து எடுத்த மில்லர்: அதிவேக டி20 சதம்!


தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது வங்கதேச அணி.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி வங்கதேச பந்துவீச்சை எல்லா பக்கமும் விரட்டி அடித்து ரன் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அம்லா 85 ரன்களை வெறும் 51 பந்துகளில் அடித்து நொறுக்கினார். பின்னர் வந்தவர் விரைவில் பெவிலியன் திரும்ப, அம்லாவுடன் இணைந்த டேவிட் மில்லர் வானவேடிக்கை காட்டினார்.

முகமது சைஃபுதீன் வீசிய 19வது ஓவரில் முதல் 5 பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ஆனால், கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். இதனால், இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் விளாசிய சாதனையை சமன்செய்யத் தவறினார். 35 பந்தில் சதமடித்த அவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் டி20 போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை தனதாக்கினார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. 225 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்