ஆப்நகரம்

Deodhar Trophy: சதம் அடிப்பதற்கு முன்னரே கொண்டாடிய ரஹானே : அமைதியா இருக்க சொன்ன ரெய்னா

தியோதர் கோப்பை இறுதிப் போட்டியின் போது ரஹானே சதம் அடித்து வெற்றிக்கு பெரிய பங்களிப்பை அளித்தார். இந்த போட்டியில் ரஹானே சதம் அடிப்பதற்கு முன்னரே கொண்டாடினார்.

Samayam Tamil 28 Oct 2018, 1:20 pm
புதுடெல்லி : தியோதர் கோப்பை இறுதிப் போட்டியின் போது ரஹானே சதம் அடித்து வெற்றிக்கு பெரிய பங்களிப்பை அளித்தார். இந்த போட்டியில் ரஹானே சதம் அடிப்பதற்கு முன்னரே கொண்டாடினார்.
Samayam Tamil rahane


இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான தியோதர் கோப்பை தொடர் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது.

இந்த தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி அணிகள் என பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் ஒரு முறை மோதின.

இத்தொடரில் இந்தியா ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக், பி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், சி அணிக்கு அஜிங்கியா ரஹனே கேப்டனாக செயல்பட்டனர்.

இந்தியா ஏ இரண்டு போட்டியில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறவில்லை.

இந்திய சி அணி வெற்றி :
நேற்று தியோதர் கோப்பை இறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியா பி, இந்தியா சி அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய இந்தியா சி அணி 352/7 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்தியா பி அணிகள் 46.1 ஓவரில் 323 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ரஹானே கொண்டாட்டம் :
இந்த போட்டியில் இந்திய சி அணி கேப்டன் ரஹானே தொடக்க வீரராக களமிறங்கி 156 பந்தில் 144 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


அவர் 97 ரன்கள் அடித்த போது சதம் அடித்துவிட்டதாக நினைத்து, ரஹானே பேட்டை தூக்கி கொண்டாடினார்.

பெவிலியனில் இருந்த சுரேஷ் ரெய்னா இன்னும் 3 ரன் அடிக்கனும் என சைகை காட்டினார். இருந்தாலும் அதை கவனிக்காமல் ரஹானே கொண்டாடினார். மைதானத்தில் இருக்கும் ஸ்கோர் போர்டில் தவறாக 100 ரன்கள் என மாற்றியதால் ரஹானே இப்படி செய்துள்ளார்.
இந்த போட்டியில் சதம் (144*) அடித்த ரஹானே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்