ஆப்நகரம்

‘தல’ தோனியிடம் மக்குதனமா மாட்டிய கோரி: கண்ணை மூடி அவுட் கொடுத்த பிளமிங்!

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், புனே அணியின் விக்கெட் கீப்பர் தோனி மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து அசத்தினார்.

TOI Sports 12 May 2017, 10:01 pm
புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், புனே அணியின் விக்கெட் கீப்பர் தோனி மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து அசத்தினார்.
Samayam Tamil dhoni makes another lightning stumping against dd
‘தல’ தோனியிடம் மக்குதனமா மாட்டிய கோரி: கண்ணை மூடி அவுட் கொடுத்த பிளமிங்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியில், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின், ஸ்ரேயாஷ் ஐயர் (3) தோனி கையில் சிக்கினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 100வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமானார் தோனி. தவிர, ஐபிஎல் அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு (105 விக்கெட்) பின் தோனி இரண்டாவது இடம் பிடித்தார்.

தொடர்ந்து வழக்கம் போல மின்னல் வேகத்தில் செயல்பட்டு மிரட்டினார் தோனி. வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை எதிர்கொண்ட டெல்லி வீரர் கோரி ஆண்டர்சன், இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சிக்க, மக்குதனமாக பந்தை தவறவிட்டார். தொடர்ந்து தோனி கையில் அகப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே பெயில்ஸ் பறந்தது. இதையடுத்து கோரி ஆண்டர்சன் பரிதாபமாக விக்கெட்டை இழந்தார்.


அம்பயரே தேவையில்ல:
தோனியின் ஸ்டெம்பிங் அப்பீலை தொடர்ந்து களத்தில் இருந்த அம்பயர் டி-வி அம்பர்யரிடம் கேட்க, அதற்கு முன்னதாகவே புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங், அவுட் என கையை தூக்கினார். தோனியின் வேகம் அவரது பயிற்சியாளருக்கு தெரியாதா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்