ஆப்நகரம்

Keshav Banerjee: தோனி எப்போது ஓய்வு பெறனும்?- பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் கருத்து.. இப்படி சொல்லிடாங்களே!

உலகக் கோப்பைக்கு பின் தோனி ஓய்வு பெற வேண்டும் என பலரும் வலியுறுத்துவது குறித்து தோனியின் பெற்றோர் மற்றும் தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Jul 2019, 12:33 pm
தல தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகளுடன் கூடிய செயல்களை செய்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர், பல்வேறு விமர்சனங்கள் தோனி மீது எழுந்ததோடு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil Dhoni Coach 1


தோனியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தாண்டு தொடக்கத்திலிருந்து மிகச்சிறப்பாக ஆடி வந்த தோனி, உலகக் கோப்பை தொடரில் மீண்டும் தோனி மீது விமர்சனங்கள் கிளம்பியது.

பெற்றோர்களின் கருத்து:
தோனி மீது அதிக விமர்சனங்கள் வந்ததோடு, அவர் ஓய்வு பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருவதால், தோனி தற்போது ஓய்வு பெறுவது தான் சிறந்த தருணம். அவர் மீது அதிக பாரம் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

தோனி எப்போது ஓய்வு பெறுவார் - ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம்

பயிற்சியாளர் கருத்து:
தோனியின் பெற்றோர்கள் தன்னிடம் தோனி ஓய்வு பெறுவது நல்லது என தெரிவித்தது மிகவும் பாதித்தது என தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆனால் தோனி என்ன செய்ய வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். அவர் குறைந்தபட்சம் 2020 டி20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும்.

தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம்!

அதே சமயம் தோனி நீண்ட நேரம் விளையாடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலக்கிக் கொள்ளலாம். 50 ஓவர் போட்டிகளில் கீப்பிங் செய்துவிட்டு மீண்டும் பேட்டிங் செய்வது என்பது மிகவும் சிக்கலானது. உடல் ஒத்துழைக்காது.

BCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு? எனன தகுதி இருக்கனும் தெரியுமா?

ஆனால் டி20 போட்டி மிக குறைந்த நேரம் விளையாடப்படுவதால் தோனி டி20 போட்டிகளில் தொடரலாம் என தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்