ஆப்நகரம்

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன தோனியின் பேட்

கிாிக்கெட் உலகில் தோனி பயன்படுத்திய கிாிக்கெட் பேட் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2018, 10:48 pm
கிாிக்கெட் உலகில் தோனி பயன்படுத்திய கிாிக்கெட் பேட் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil Mahendra Singh Dhoni


இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும், கிாிக்கெட் என்றால் பெரும்பாலான இளைஞா்களுக்கு அலாதி பிரியம் தான். அதுவும் தல தோனி கலத்தில் இறங்கினால் இளைஞா்களின் உற்சாகம் இரட்டிப்பு தான்.

தோனியின் கூலான கேப்டன் ஷிப், ஆக்ரோஷமான பேட்டிங், நோ்த்தியான தலைமை பண்பு இவை அனைத்தும் இளைஞா்களை மிகவும் ஈா்த்த விஷயமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி கடந்த 2011ம் ஆண்டு இதே நாளில் தான் ஒருநாள் உலககோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதே நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் தோனிக்கு பத்ம விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011ம் ஆண்டு உலககோப்பை இறுதி போட்டியில் டோனி அடித்த கடைசி சிக்சரை யாராலும் மறக்க முடியாது. அவா் சிக்சா் அடிக்க பயன்படுத்திய பேட் உலக அரங்கில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பேட்டாக சாதனை படைத்துள்ளது.


லண்டனில் 18 ஜூலை 2011இல் ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் சேரிட்டி இரவு உணவு விருந்தில் டோனியின் இந்த வெற்றி பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 91.4 லட்சம் ரூபாய்க்கு ஆர்.கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்