ஆப்நகரம்

உயிருக்கு அச்சுறுத்தல்- துப்பாக்கி உரிமம் வேண்டி சாக்ஷி தோனி விண்ணப்பம்!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 11:50 am
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
Samayam Tamil துப்பாக்கி உரிமம் வேண்டி சாக்ஷி தோனி விண்ணப்பம்!!
துப்பாக்கி உரிமம் வேண்டி சாக்ஷி தோனி விண்ணப்பம்!!


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் முக்கியமானவராகவும், அதிக ரசிகர்களை கொண்டவராகவும் உள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், தோனியை ஊக்கப்படுத்தும் வகையில், அவரின் மனைவி சாக்ஷியும் மகள் ஷிவாவும் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். அதிலும் குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் மகள் ஷிவாவுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது என்றால் மிகையாது.

இந்நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி, தான் எப்போது வீட்டில் தனியாகவே இருப்பதாலும், வெளியில் தனது சொந்த விஷயங்களுக்காக செல்லும்போதும் தனியாகவே உள்ளதாலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ள்ளார். இதனால், பிஸ்டல் அல்லது 0.3 ரிவால்வர் வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்