ஆப்நகரம்

செஞ்சுரி அடித்த சண்டிமாலை கழட்டிவிட்ட இலங்கை அணி: ஒருநாள் தொடருக்கு பெரேரா கேப்டன்!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் கேப்டன் சண்டிமால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

TOI Sports 5 Dec 2017, 12:44 pm
கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் கேப்டன் சண்டிமால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
Samayam Tamil dinesh chandimal axed from sri lanka odi side despite test ton vs virat kohlis india
செஞ்சுரி அடித்த சண்டிமாலை கழட்டிவிட்ட இலங்கை அணி: ஒருநாள் தொடருக்கு பெரேரா கேப்டன்!


இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் பின் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அணியை இலங்கை அணி நிர்வாகம் இன்று அறிவித்தது.

இதில் திசாரா பெரேரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் அணியின் கேப்டனான சண்டிமால், மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்த போதும் அணியில் கூட சேர்க்கப்படவில்லை.

தவிர, தொடர்ந்து மூன்று ஒருநாள் தொடர்களை இழந்த இலங்கை அணியின் கேப்டனாக இருந்த உபுல் தரங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட குணரத்னே மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இலங்கை ஒருநாள் அணி விவரம்: திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, டிக்வெலா, சமரவிக்ரமே, திரிமன்னே, மாத்யூஸ், குணரத்னே, சதுரங்கா டி சில்வா, பதிரானா, தனஞ்சயா, ஜெப்ரி வாண்டசே, துஸ்மந்தா சமீரா, சுரங்கா லக்மால், நுவன் பிரதீப்


Colombo: Sri Lanka on Tuesday left out Test skipper Dinesh Chandimal from the one-day squad to face India on the day he completed a crucial century to help his side save face in the third Test.

அடுத்த செய்தி

டிரெண்டிங்