ஆப்நகரம்

‘அசத்தும் தமிழக வீரர்’ கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் சர்வதேச அளவில் வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 16 May 2021, 7:19 am
Samayam Tamil தினேஷ் கார்த்திக்
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட் இணைந்து தி ஹண்ரட் என்னும் கிரிக்கெட் தொடரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொடர் வருகிற ஜூலை 21ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும். ஒரு இன்னிங்ஸில் மொத்தம் 100 பந்துகள் மட்டுமே வீசப்பட்டும். எத்தனை அணிகள் பங்கேற்கவுள்ளன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. கிட்டதட்ட 68 போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆடவர் மட்டுமல்ல மகளிர் பங்கேற்கும் தி ஹண்ரட் தொடரும் நடைபெறவுள்ளது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத், ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா உட்பட 5 பேர் இதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்படவுள்ளனர்.

இத்தொடருக்கு வர்ணனையாளர்களாக யார்யார் செயல்பட உள்ளனர் என்பது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். மேலும் கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப், ஸ்டூவர்ட் பிராட், டேரன் சமி ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்