ஆப்நகரம்

யுவராஜுக்கு கருணை காட்டுவது ஆபத்து - சபா கரீம்

யுவராஜ் சிங்-யை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ப்பது தனக்கு தானே ஆபத்தை வரவலைப்பது என முன்னாள் அணி தேர்வாளர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

TOI Sports 11 Sep 2017, 7:06 pm
யுவராஜ் சிங்-யை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ப்பது தனக்கு தானே ஆபத்தை வரவலைப்பது என முன்னாள் அணி தேர்வாளர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil discount yuvraj singh at your own peril former selector saba karim
யுவராஜுக்கு கருணை காட்டுவது ஆபத்து - சபா கரீம்


இந்தியா 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற போது தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டவர் அதிரடி நாயகன் யுவராஜ் சிங். உலகக் கோப்பை தொடரில் 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியவர்.

அதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அதற்கடுத்து ஒருவருடத்தில் தனது உடற் தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார்.

இருப்பினும் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தோனி, கோலி, தவான், ரோகித் சர்மா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சபா கரீம் பேச்சு :
யுவராஜ் சிங் பீனிக்ஸ் பறவை போன்றவர். சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழக்கூடியவர். அவரின் சாதனைக்கு அளவே இல்லை. இருப்பினும் தற்போதுள்ள சூழலில் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

யுவராஜின் உடற்தகுதி ஒரே மாதிரியில்லாமல் மாறுவதால், தற்போது அவரை சேர்ப்பது ஆபத்து என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்