ஆப்நகரம்

டிரா ஆனது இங்கிலாந்து டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

Samayam Tamil 18 Aug 2020, 8:45 am
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் சவுதாம்டனில் நடந்தது. முதல் நாளில் 126/5 எனப் பாகிஸ்தான் இருந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. பாபர் அசாம், முகமது ரிஷ்வான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஸ்டூவர்ட் பிராடின் துல்லியமான பந்து வீச்சால் பாபர் அசாம் 47 அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய யஷிர் ஷா, ஷாஹின் அஃப்ரிதி, முகமது அப்பாஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
Samayam Tamil Eng vs Pak


இருப்பினும் மறுமுனையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் 72 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 236 என்ற கௌரவமான ஸ்கோரை பாகிஸ்தான் எட்டியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி வேகப்பந்து வீச்சில் மிரட்டினர். பிராட் 4 விக்கெட்களையும், ஆண்டர்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். சாம் கரன், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

அடுத்துக் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. ரோரி பர்ன்ஸ் டக்வுட் ஆனார். சிப்லியும், ஜாக் கிரௌலியும் களத்தில் இருந்தனர். 5வது நாள் ஆட்டத்தில் கிரௌலி அரை சதம் கடந்தார். ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 110 ரன்களை எடுத்திருந்த போது, இரு அணிகளும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.

மறக்கமுடியுமா ரெய்னாவின் இந்த ஆட்டங்கள், போட்டோ தொகுப்பு!

முகமது அப்பாஸ் இரண்டு விக்கெட்களையும், யஷிர் ஷா மற்றும் ஷாஹின் அஃப்ரிதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். வெளிநாட்டு மைதானங்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 7 முறை தோல்வியடைந்துள்ளது. இப்போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் இருந்த நிலையில் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் அணி, மற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் எனப் பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி கூறியிருந்தார். ஆனால் மழையால் பாகிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்