ஆப்நகரம்

ICC ODI Rankings: ஐபிஎல் தொடரால், தரவரிசையில் கீழே சென்றது இந்திய அணி!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 May 2018, 6:11 pm
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!!!
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!!!


சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், ஒருநாள் போட்டிகளுக்கானதரவரிசையில், முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதேபோல், டி20 போட்டியில் இரண்டாம் இடத்திலிருந்த இந்திய அணி 123 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டி20 தரவரிசையில் பாகிஸ்தான் அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி 126 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.



முன்னதாக, நேற்று வெளியான டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில், 125 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி 112 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரால், அடுத்த ஒரு மாதத்திற்கு சர்வதேச போட்டிகள் எதிலும் இந்திய வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்