ஆப்நகரம்

ஜாஸ் பட்லரின் உலகக்கோப்பை ஃபைனல் ஜெர்சி எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா?

லண்டன்: கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புக்காக உதவும் வகையில் உலகக் கோப்பை ஃபைனலில் தான் அணிந்திருந்த ஜெர்சியை இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஏலம் விட்டார். இது சுமார் 65,000 பவுண்ட்டுக்கு ஏலம் போனது.

Samayam Tamil 8 Apr 2020, 1:13 pm
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஃபைனலில் இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கில் அரைசதம், சூப்பர் ஓவரில் பேட்டிங், மேலும் கடைசி பந்தில் கப்டில் ரன் அவுர் என வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர்.
Samayam Tamil ஜாஸ் பட்லர்


ஏலம் விடப்பட்ட ஜெர்சி
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புக்காக உதவும் வகையில் உலகக் கோப்பை ஃபைனலில் தான் அணிந்திருந்த ஜெர்சியை இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஏலம் விட்டார். இந்நிலையில் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை விடப்பட்ட இந்த ஜெர்சி 65,000 பவுண்டுக்கு ஏலம் போனது.

அறக்கட்டளைக்காக
இதில் கிடைத்த பணம் ராயல் பிராம்ப்டன், ஹாரிபீல்டு மருத்துவமனை அறக்கட்டளைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்லர் ஏற்கனவே கூறுகையில்,‘‘தற்போதுள்ள நிலையில் வீரர்களுக்கு பணம் எவ்வளவு அவசியம் என தெரியும். மிகப்பெரிய தொகை இதில் முதலீடாக செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த தொகை ஓரளவு கைகொடுக்கும் என் நம்புகிறேன்” என்றார்.

Virat Kohli: இதுக்காகத்தான் கோலிக்கு எதிரா பொத்திக்கிட்டு இருக்காங்க: ஆஸி வீரர்கள் மீது கிளார்க் காட்டம்!

மே 28 வரை
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மே 28 வரை கிரிக்கெட் போட்டிகளுக்கு அங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட படி எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை என்றால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு 300 மில்லியன் பவுண்ட் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

World ODI XI: சிறந்த உலக லெவன் அணி... ஜாம்பவான் சச்சின், சேவாக்கை சேர்த்த வார்ன்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்