ஆப்நகரம்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்கு..!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 312 ரன்கள் வெற்றி இலக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 20 Jul 2020, 7:08 pm
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil england West Indies test


முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முழுமையாக ரத்தானது. நான்காம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 287 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

182 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 17 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின், பாட்னர்ஷிப் அமைத்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஐந்தாம் நாள் முதல் செசனில் கேமர் ரோச் வீசிய முதல் ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி அதிரடி காண்பித்தார். ரன் வேட்டையில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இணை, 67 பந்துகளை சந்தித்து 73 ரன்களை குவித்தது. 13-வது ஓவரில் கேப்டன் ஜோ ரூட் ரன்அவுட் ஆகி 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில், ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் 78 ரன்களுடனும், ஒல்லி போப் 17 ரன்களுடனும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.

முதல் இரண்டு விக்கெட்களை வேகமாக வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதன்பின் விக்கெட்களை வீழ்த்த திணறினர். கேமர் ரோச் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். ஏனைய பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்த திணறினர்.

“இந்தியாவுடன் விளையாடுவது ஆஷஸ் தொடருக்குச் சமம்”: பிரட் லீ கணிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, இங்கிலாந்து மண்ணில் 2000-ம் ஆண்டிற்குப் பின் இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று, இங்கிலாந்து மண்ணில் 32 வருடங்களுக்குப் பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைக்கும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணி களம் காண உள்ளது.

இருப்பினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்