ஆப்நகரம்

டி20 எல்லாம் பழசு, வருகிறது டி10 - சேவக், கெய்ல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

டி20 அறிமுகமாகி, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை ஓரம்கட்டி, உலகளவில் டி20 கிரிக்கெட் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. வருங்காலத்தில் டி20 போட்டியை கூட டி10 போட்டியால் ஓரம் கட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.

TOI Sports 27 Sep 2017, 7:37 am
டி20 அறிமுகமாகி, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை ஓரம்கட்டி, உலகளவில் டி20 கிரிக்கெட் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. வருங்காலத்தில் டி20 போட்டியை கூட டி10 போட்டியால் ஓரம் கட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
Samayam Tamil eoin morgan chris gayle and virender sehwag set to promote a t10 cricket league
டி20 எல்லாம் பழசு, வருகிறது டி10 - சேவக், கெய்ல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

ஆம், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் டி20 கிரிக்கெட்டை போல டி10 போட்டிகள் கொண்ட தொடரை நடத்தப்பட உள்ளது. இதில் முன்னனி வீரர்கள் சிலர் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.

அக்டோபர் 2ம் தேதி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் இந்த போட்டியை தொடங்கி வைக்கின்றார். இந்த போட்டியில் அதிரடி வீரர்களான கெய்ல், சகிப் அல் ஹசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதோடு, முன்னாள் வீரர்களான இந்தியாவின் சேவக், பாக்ஸ்தானின் அஃப்ரிதி, இலங்கையின் சங்ககாரா பங்கேற்க உள்ளனராம்.

மேலும் இந்த போட்டியில் தற்போது விளையாடி வரும் இங்கிலாந்தின் பவுலர் டைமல் மில்ஸ், தொடக்க வீரர் மைக்கேல் கார்பெர்ரி ஆல்ரவுண்டர் சமித் படேல் உள்ளிட்டோரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே நடைப்பெறும் இந்த போட்டி டி20 போட்டியை விட மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். மொத்தம் 13 போட்டிகள் கொண்டதாக தொடங்கும் இந்த போட்டித்தொடர் பிரபலமாகும் பட்சத்தில் வருங்காலத்தில் டி20க்கு ஆப்பு வைக்க வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்