ஆப்நகரம்

எனக்கு ஒரு நியாயம்; ஸ்மித்துக்கு ஒரு நியாயமா? - பொங்கும் டுபிளசி!

கிரிக்கெட் விதிகளை மதிக்கவில்லை என எனக்கு தண்டனை வழங்கிய ஐசிசி, ஆஸ்திரேலியாவின் ஸ்மித்துக்கு மட்டும் ஏன் சாதகமாக செயல்படுகிறது என தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி குற்றம்சாட்டியுள்ளார்.

TOI Sports 14 Mar 2017, 6:41 pm
கிரிக்கெட் விதிகளை மதிக்கவில்லை என எனக்கு தண்டனை வழங்கிய ஐசிசி, ஆஸ்திரேலியாவின் ஸ்மித்துக்கு மட்டும் ஏன் சாதகமாக செயல்படுகிறது என தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil faf du plessis surprised by icc inaction on reviewgate
எனக்கு ஒரு நியாயம்; ஸ்மித்துக்கு ஒரு நியாயமா? - பொங்கும் டுபிளசி!

டுபிளசியின் தவறு:

கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தெ.ஆ கிரிக்கெட் வீரர் டுபிளசி பந்தை சேதப்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி சம்பளத்தை 100% அபராதமாகவும், ஓரிரு போட்டிகளில் விளையாட தடை ஐசிசி விதித்தது.

ஸ்மித் டி.ஆர்.எஸ் சர்ச்சை:

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா 4 போட்டிகொண்ட டெஸ்டில் விளையாடி வருகிறது. இதன் 2வது போட்டியில் ஸ்மித் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானதும், டிரெஸ்சிங் ரூமிலிருந்து கொடுக்கப்பட்ட சிக்னலை பார்த்த ஸ்மித், அவுட்டா? இல்லையா? என்பதை கேட்டார். இதை பார்த்த கோலி கடுமையாக சீறினார். இதையடுத்து, நடுவர் ஸ்மித் ரிவீவ் எடுக்க தடை விதித்து களத்திலிருந்து அனுப்பினார்.

டுபிளசியின் குற்றச்சாட்டு:

ஸ்மித்தின் இந்த செயலுக்கு ஐசிசி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் கிரிக்கெட் விதியை மீறியுள்ளார். ஆனால் நான் செய்த தவறுக்கு தண்டனை வழங்கிய ஐசிசி, ஸ்மித்துக்கு மட்டும் இனக்கமாக செயல்படுவது ஏன் என்று கேள்வியை கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்