ஆப்நகரம்

27 ஆண்டுக்கு பின் விசித்திர சாதனை படைச்ச முதல் பாக்., வீரர் இவர் தான்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20யில் களமிறங்கிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான், 27 ஆண்டுக்கு பின் விசித்திர சாதனை படைத்தார்.

Samayam Tamil 3 Nov 2019, 5:54 pm
ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
Samayam Tamil Mohammad Irfan


மழை குறுக்கீடு
இந்நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் டி-20 போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி நாளை மறுநாள் கான்பராவில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதிய முதல் டி-20 மழையால் ரத்து...!

27 ஆண்டுக்கு பின்
இதற்கிடையில் இப்போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான், 27 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணிக்காக அதிக வயதில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார்.

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு...: 6.30 மணிக்கு இறுதி முடிவு!

இம்ரான் கான்...
37 வயதில் களமிறங்கி இந்த மைல்கல்லை இர்பான் எட்டியுள்ளார். முன்னதாக கடந்த 1992ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இம்ரான் கான் தனது 39வது வயதில் களமிறங்கினார். ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் அணிக்காக அதிக வயதில் களமிறங்கிய வீரர் மிரன் பாக்‌ஷ். இவர் கடந்த 1955ல் தனது 47வது வயதில் களமிறங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்