ஆப்நகரம்

கோக்கு மாக்கு செய்தாரா கோலி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, பந்தில் சுவிங்கத்தை தடவியதாக சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர்.

TOI Sports 22 Nov 2016, 3:44 pm
விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, பந்தில் சுவிங்கத்தை தடவியதாக சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர்.
Samayam Tamil footage emerges showing virat kohli shining the ball with a mint
கோக்கு மாக்கு செய்தாரா கோலி!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, 246 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதேபோல ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டின் முடிவில், தென் ஆப்ரிக்க அணி வென்றது. ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, பந்தில் செயற்கையான திரவத்தை தடவியதை ஐ.சி.சி., உறுதி செய்தது. இதையடுத்து, இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏற்கனவே ஐ.சி.சி., தெரிவித்திருந்தது.


போட்டு கொடுக்கும் தென் ஆப்ரிக்கா:

இன்று இதைவிசாரித்த ஐ.சி.சி., டுபிளசிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்ரிக்கா பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டின் போது இந்திய கேப்டன் விராட் கோலி, தனது சுவிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளக்க செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால் ஐ.சி.சி.,யின் பார்வை இந்திய கேப்டன் கோலி பக்கம் திரும்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்