ஆப்நகரம்

978 போட்டிகளில் முதல்முறை...படுமோசமாக தோற்ற இந்திய அணி!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் பௌலர்கள் சொதப்பியதால், மோசமான சாதனை ஒன்றை இந்திய அணி படைத்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 8:50 am
சிட்னியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து கெத்து காட்டியது. குறிப்பாக, ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் இருமுறையும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ப்ளூ ஆர்மியின் பௌலர்களை வெளுத்து வாங்கினர்.
Samayam Tamil india vs australia


இதனால், இந்திய அணி 978 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை ஓபனிங் பேட்ஸ்மேன்ளை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டு மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2020 பிப்ரவரி மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி குப்தில்-நிக்கோலஸ் (106), அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர்-ஆரோன் ஃபிஞ்ச் (156, 142) ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

ஸ்மித் மிரட்டல் சதம்: தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி!

ஜஸ்பீரித் பும்ரா, முகமது ஷமி, யுஷ்வேந்திர சஹல் போன்ற வலிமைமிக்க முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்திய அணி இந்த மோசமான சாதனையை படைத்தது குறித்து ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்

‘தமிழகத்தைச் சேர்ந்த ‘யார்க்கர் கிங்’ நடராஜனை அணியில் சேர்த்திருந்தால் இப்படிப்பட்ட அவமானம் நமக்கு நேர்ந்திருக்குமா?’ எனப் பலர் ட்வீட் செய்துள்ளனர். .

இரண்டு சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித், இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இதற்குமுன், ஜாகீர் அப்பாஸ், நஷிர் ஜஸ்மத், குவின்டன் டி காக் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சதம் அடித்திருந்தனர்.

6ஆவது பௌலர் எங்கே? இந்திய அணிக்கு ரொம்பதான் தைரியம்: கம்பீர் கடும் விமர்சனம்!

அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் முதல் 5 வீரர்களும் அரை சதம் அடித்தது இதுவே முதல்முறை. (வார்னர் 83, ஃபிஞ்ச் 60, ஸ்மித் 104, மார்னஸ் லபுஷேன் 70, கிளென் மேக்ஸ்வெல் 63). இதற்குமுன், 2013ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதல் 4 வீரர்கள் அரை சதம் கடந்திருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்