ஆப்நகரம்

Kapil Dev: இதெல்லாம் இனிமே வேலைக்கே ஆகாது தோனி... பேசாம வீட்டுக்கே கிளம்புங்க!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது மிகவும் கடினமான விஷயம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2020, 8:21 pm
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின், முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மேலும் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் தோனியை பிசிசிஐ கழட்டிவிட்டது. இதனால் தோனியின் எதிர்காலம் குறித்து வதந்திகள் தாறுமாறாக பரவத்துவங்கியது.
Samayam Tamil MS Dhoni _Kapil Dev


ஆர்வமுடன்
முன்னாள் வீரர்கள் பலரும் தோனி மீண்டும் களத்துக்கு திரும்புவார் என்றும் சிலர் இது மிகவும் கடினமான விஷயம் என்றும் மாறி மாறி கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு தோனி திரும்புவது குதிரைக் கொம்பான விஷயம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில்,“தோனி நீண்ட காலமாகவே கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்துக்கு திரும்புவது கடினமானது.

யாரு வேண்டாம்ன்னு சொன்ன
சுமார் 9-7 மாதமாகவே கிரிக்கெட் விளையாடவில்லை என்பதால் அனைவர் மனதிலும் சந்தேகம் எழுகிறது. ஆனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பாக ஐபிஎல் உள்ளது. தோனி நாட்டிற்காக நிறைய விஷயங்கள் செய்துள்ளார். இதுதான் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் ஃபிட்னஸ் என்பது அவரிடம் கேட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் இவ்வளவு நாட்கள் யார் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க சொன்னார்கள் என்பதே கேள்வி” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்