ஆப்நகரம்

Sakshi Dhoni: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்த தல தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைப்பெற உள்ளது. ராஞ்சிக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தல தோனி தனது வீட்டில் தடபுடலாக விருந்து வைத்துள்ளார்.

Samayam Tamil 7 Mar 2019, 4:52 pm
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைப்பெற உள்ளது. ராஞ்சிக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தல தோனி தனது வீட்டில் தடபுடலாக விருந்து வைத்துள்ளார்.
Samayam Tamil dhoni dinner


இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் வரும் ஆஸ்திரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

நாளை ஜார்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் சென்றுள்ளனர்.

தோனி வீட்டியில் விருந்து:
தோனியின் சொந்த ஊர் என்பதால், ராஞ்சிக்கு சென்றுள்ள இந்திய வீரர்களை, தோனி - சாக்‌ஷி தம்பதி தனது வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்துள்ளார்.


விருந்தில் கலந்து கொண்ட மன மகிழ்வுடன் விருந்துக்கு பின்னர் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்