ஆப்நகரம்

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை காவல்த்துறை!

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 25 Jun 2020, 6:29 pm
கொரோனா நோய்த் தொற்று பரவுதலை தடுக்க கடந்த மாா்ச் 24ஆம் தேதி லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. பின் மீண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதியும், மே 4 ஆம் தேதியும், மே 17ஆம் தேதியும் லாக் டவுன் நீட்டிக்கப்பட்டது. தற்போது ஐந்தாவது கட்டமாக ஜூன் 30 ஆம் தேதி வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Robin singh


இதற்கிடையில் சென்னை, புறநகா் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் முழு லாக் டவுன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் சென்னை பெசண்ட் நகரில் வசிக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங், தனது காரில் திருவான்மியூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ராபின் சிங்கின் காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

காய்கறி வாங்குவதற்காக காரில் சென்றதாக ராபின் சிங் தெரிவித்துள்ளார். ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருள்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக ராபின் சிங்கின் கார் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ராபின் சிங் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரின் கார் திருவான்மியூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தபின் ராபின் சிங்கிடம் கார் ஒப்படைக்கப்படும். அபராதத்தைச் செலுத்திய ராபின் சிங், இன்னொரு கார் மூலம் தனது வீட்டுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்