ஆப்நகரம்

ட்விட்டரில் இருந்து வக்கார் யூனிஸை ஓடவிட்ட ஹேக்கர்: ஆபாச வீடியோவை லைக் செய்து அட்டகாசம்!

லாகூர்: முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வக்கார் யூனிஸ், தனது கணக்கு ஹேக்கரால் முடக்கப்பட்டதால், சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறினார்.

Samayam Tamil 29 May 2020, 4:15 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ். இவரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ஆபாச வீடியோ லைக் செய்யப்பட்டதால், சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இனி தான் சமூக வலைதளத்தையே பயன்படுத்தப்போவது இல்லை என்றும் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Waqar Younis


ஹேக் செய்யப்பட்டது
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில்,“இன்று நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அதிகாலையில் எழுந்து பார்த்த போது எனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்திருந்தனர். ஆபாச வீடியோக்களையும் எனது கணக்கில் இருந்து லைக் செய்திருந்தனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் இது மிகப்பெரிய அவமானமாகும். இதனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தவே யோசிக்கிறேன்.


முதல் முறையல்ல
எனது கணக்கு இப்படி முடக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே மூன்று அல்லது நான்கு முறைகளாவது இப்படி நடந்திருக்கிறது. இதை அந்த ஹேக்கர் நிறுத்துவார் என்று தோன்றவில்லை. அதனால் இனி நான் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்துவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நான் என் குடும்பத்தை அதிகமாக நேசிக்கிறேன். இன்றில் இருந்து என்னை சமூக வலைதளத்தில் நீங்கள் பார்க்க முடியாது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோனியும் விளையாடட்டுமே: ஸ்ரீசாந்த் !

படு ஆக்டிவ்
சமூக வலைதளமான ட்விட்டரில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் படுஆக்டிவாக உள்ளவர். இவரை 1.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது யூனிஸ் பதில் அளிப்பார். பாகிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக வக்கார் தற்போது உள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தான் அணி விரைவில் இங்கிலாந்து செல்கிறது. ஆனால் இதற்கான அட்டவணையை இதுவரை இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் வெளியிடவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்