ஆப்நகரம்

பொறியாளர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தாச்சு

இந்தியாவில் ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஐதராபாத்தை சேர்ந்த இப்ராகிம் கலீல் அமெரிக்காவின் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

TOI Sports 26 Apr 2017, 4:44 pm
இந்தியாவில் ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஐதராபாத்தை சேர்ந்த இப்ராகிம் கலீல் அமெரிக்காவின் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil former ranji player ibrahim khaleel named in usa squad for world cricket league
பொறியாளர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தாச்சு


இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஐதராபாத், மும்பை அணிகளுக்கு முன்பு விளையாடிய இப்ராகிம் கலீல் மற்றும் விண்டவார்ட் தீவை சேர்ந்த லெக்ஸ்பின்னர் கமிலஸ் அலெக்ஸாண்டர் ஆகிய இருவருக்கும், ஐசிசி உலக கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கான அமெரிக்காவின் 14 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஐசிசி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், அந்த வீரர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிவிப்பது கட்டாயம். அதோடு அந்த நாட்டில் குறைந்தது 4 வருடமாவது வசித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த வகையில் இந்தியாவின் இப்ராகிம் கலீல் கடந்த 2012ம் ஆண்டும் அமெரிக்காவில் சென்று செட்டிலாக சென்றார். ஆனால் அவருக்கு அதிகாரப்பூர்வமான குடியுரிமை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு கிரீன் கார்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை அமெரிக்காவின் 14 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவில் படித்த பொறியாளர்கள், மருத்துவர்கள் அமெரிக்காவில் சென்று செட்டிலாக ஆசைப்படுகின்றனர். பலரும் அமெரிக்காவுக்கு பறந்து விடுகின்றனர். தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அமெரிக்காவுக்காக விளையாட கிளம்பியுள்ளார்.

Former Ranji Player Ibrahim khaleel named in USA squad for world cricket league

அடுத்த செய்தி

டிரெண்டிங்