ஆப்நகரம்

அடுத்த வருஷம் நடந்தாலும் தல தோனி விளையாடுவார்: பயிற்சியாளர்!

கொல்கத்தா: சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடரில் கூட தோனி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அவரின் சிறு வயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 May 2020, 4:36 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஓய்வு தான் தற்போது டிரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. நேற்று திடீரென #DhoniRetires என்ற ஹேஸ்டாக் டிரெண்டாக துவங்கியது.
Samayam Tamil MS Dhoni


வாய்ப்பு உள்ளது
இந்நிலையில் தோனியிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படி சமூக வலைதளத்தில் தவறான தகவல் டிரெண்டாக துவங்கியது அவரின் மனைவி ஷாக்சி கடுப்பாகி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கிடையில் தோனியின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் கேசவ் பானர்ஜீ, சமூக வலைதளத்தில் வெளியாகும் தகவல்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும். அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேனர்ஜீ கூறுகையில், “யாராவது ஒருவரை அழைத்து அவர்களிடன் நான் ஓய்வு பெறப்போகிறேன் என தெரிவிக்கும் ஆள் இல்லை தோனி. அவருக்கு ஓய்வை எப்படி அறிவிக்க வேண்டும் என தெரியும். முறைப்படி பிசிசிஐ க்கு தகவல் அளித்து பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார். அதை ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது செய்தார்.

டிசம்பர் 3 இல் துவங்குகிறதா இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்?

நம்ப வேண்டாம்
சமூக வலைதளத்தில் வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இது போல பல விஷயங்கள் டிரெண்டாகும் ஆனால் இறுதியில் அவை அனைத்தும் போலியானவை என தெரிந்துவிடும். ஏன் இப்படிப்பட்டவர்கள் தோனியை குறி வைக்கிறார்கள் என தெரியவில்லை. அவரை எனக்கு முழுமையாக தெரியும், ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது என அவர் நினைத்தால், நேரடியாக அழைத்து தெரிவிப்பார்.

ஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே!

அடுத்தாண்டு கூட
இந்த வயதிலும் தோனி எவ்வளவு ஃபிட்டானவர் என்பதை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பார்ப்பீர்கள். ஒருவேளை அடுத்தாண்டுக்கு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், கூட தோனிக்கு அதில் விளையாடும் தகுதி உள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்