ஆப்நகரம்

Bangladesh Head Coach: வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ரசல் டோமிங்கோ

டி20 உலகக் கோப்பை கனவை நிறைவேற்ற வங்கதேச அணியின் பயிற்சியாளராக நியமிகக்ப்பட்டார் ரசல் டோமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2019, 4:13 pm
வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ரசல் டோமிங்கோவங்கதேச அணிக்கு புதிய பயிற்சியாளராகத் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் ரசல் டோமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Russell Domingo


உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்மதிப்பை பெற்றது.

உலகக் கோப்பையை தொடர்ந்து, அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை மீது அனைத்து அணிகளின் கண்களும் உள்ளன. அதற்கேற்றார் போல ஒவ்வொரு அணியும் தங்களின் செயல்பாடுகளை மாற்ற தொடங்கி உள்ளன. இந்திய அணிக்கு ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போல் வங்கதேச அணி அண்மையில் நியூசிலாந்தின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் டேனியல் விட்டோரி, தென் ஆப்ரிக்கா வேகப்பந்துவீச்சாளர் சார்ல் லாங்வெல்ட் ஆகியோர் பந்துவீச்சாளர்களை மேம்படுத்த, பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.



புதிய தலைமை பயிற்சியாளர்:
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான ரசல் டோமிங்கோ வங்கதேச ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 44 வயதான ரசல் டோமிங்கோ, முன்னர் 19 வயதுக்குப்பட்டோருக்கான தென் ஆப்ரிக்கா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். 2014 டி20 உலகக் கோப்பை மற்றும் 2015 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அரையிறுதி வரை முன்னேறியது. அப்போது தென் ஆப்ரிக்காவைச் சிறப்பாக வழிநடத்திய பயிற்சியாளராக டோமிங்கோ செயல்பட்டார்.

இதன் காரணமாக வங்கதேச அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரசல் டோமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்