ஆப்நகரம்

புனே டிராப்பிக்கில் சிக்கிய முன்னாள் இலங்கை வீரர்.. ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு புலம்பல்!

புனேவின் டிராபிக் ஜாமில் சிக்கியதாக முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 9 Jan 2020, 4:20 pm
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil russel arnold


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு அணிகல் மோதும் கடைசி டி-20 போட்டி நாளை புனேவில் நடக்கிறது.

வர்ணனையாளர் ரசல்
இந்திய தொடரில் டிவி வர்ணனையாளராக முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்டு பணியாற்றுகிறார். இதற்காக புனே சென்ற ரசல், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் கடுமையான டிராபிக் ஜாமில் சிக்கியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ரசல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஓ டியர் எந்த பக்கமும் செல்ல முடியவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.


ரசிகர்கள் பதில்
இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் புனேவில் இது போல டிராபிக் ரொம்ப சகஜம் தான் பாஸ் என ரசலுக்கு பதில் அளித்து வருகின்றனர். ரசல் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 3 சதம் 10 அரைசதம் உட்பட 1821 ரன்கள் எடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்