ஆப்நகரம்

உமர் அக்மல் மேல்முறையீட்டை விசாரிக்கும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

கராச்சி: ஊழல் புகாரில் சிக்கி மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட உமர் அக்மலலின் மேல் முறையீட்டில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முகமது கோகர் விசாரணை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 31 May 2020, 2:27 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், 29 வயது. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்பு பிரிவு விதிகளை மீறிய காரணத்துக்காக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil Umar Akmal


மேல் முறையீடு
இவரின் விதிமீறல் குறித்து ஒழுங்கு நடவடிக்கை பேனலுக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் அக்மலுக்கு மூன்று ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இந்த விசாரணையில் புக்கிகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டு இடம் தெரிவிக்க மறுத்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேல் முறையீடு செய்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விசாரிக்க தனி பேனல் எதுவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அமைக்கவில்லை. இதனால் பிரதமர் பாராளுமன்ற ஆலோசகரின் உதவியை அக்மல் நாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடினமான காலகட்டத்தில் இது தான் மிகவும் முக்கியம்: தினேஷ் கார்த்திக்!

முன்னாள் நீதிபதி
இந்நிலையில் அக்மலின் மேல் முறையீட்டைமுன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முகமது கோகர் விசாரணை நடத்தவுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனி நீதிபதி தான் அக்மலின் மேல் முறையீட்டை எப்போது விசாரிக்க வேண்டும் என்ற தேதியை முடிவு செய்வார். அந்த விசாரணை தேதி உறுதி செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முறையான அறிக்கை வெளியிடும்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

இனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது: கொரோனா மாற்றம் குறித்து கிங் கோலி!

தகராறு பார்ட்டி
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்பாக நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வின் போதும் உமர் அக்மல் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. ஆனால் அதற்கு பின் நடந்த விசாரணையில் தவறான புரிதலால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவரை விட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்