ஆப்நகரம்

‘தல’ தோனி மகள் ஜிவாவின் பிறந்தநாள் இன்று!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனி இன்று தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Samayam Tamil 6 Feb 2020, 1:00 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி நடத்தும் நடத்தப்படும் மூன்று உலகக்கோப்பைகளை (50 ஓவர் (2011), டி-20 உலகக் கோப்பை (2007), மினி உலகக்கோப்பை (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர்.
Samayam Tamil MS Dhoni


எப்போது வருவார்
டெஸ்ட் அரங்கிலும் இந்திய அணிக்கு வெற்றிக் கேப்டனாக ஜொலித்தார் தோனி. இருப்பினும் தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2014இல் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போதும் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டமான பேட்டிங் காரணமாக மீண்டும் கடும் விமர்சனங்களை எதிர் கொண்டார்.

காத்திருந்த தோனி
இதையடுத்து தற்போதுவரை மீண்டும் சர்வதேச அணியில் தோனி தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2015இல் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்ற போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, தோனியின் மனைவி ஷாக்சி, சக வீரரான ரெய்னாவை தொடர்பு கொண்டு ஜிவா பிறந்த தகவலை தோனியிடம் தெரிவிக்கும்படி தெரிவித்தார். ஆனால் தேசத்துக்காக விளையாடும் போது, மற்றவை காத்திருக்க வேண்டும் என தோனி தெரிவித்தார். பின் நாடு திரும்பிய பின் தான் மகள் ஜிவாவை தோனி நேரில் பார்த்தார்.

ஐந்தாவது பிறந்தநாள்
இந்நிலையில் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா, இன்று தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தோனியின் ரசிகர்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தோனி தனது குடும்பத்துடன் மாலத்தீவு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்