ஆப்நகரம்

நான் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் கம்பிர் தான் காரணம் - குல்தீப் யாதவ்

என்னை திறமையை அதிகரிக்கவும், அணியில் இடம்பெற காரணமாக இருந்தவர் கெளதம் கம்பிர் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 19 Sep 2017, 5:22 pm
என்னை திறமையை அதிகரிக்கவும், அணியில் இடம்பெற காரணமாக இருந்தவர் கெளதம் கம்பிர் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil gautam gambhir backed me when no one knew me says kuldeep yadav
நான் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் கம்பிர் தான் காரணம் - குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் கூறியதாவது :
ஐபிஎல் போட்டியில் 2012ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தவர் குல்தீப் யாதவ். ஆனால் அதில் அவ்வளவாக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் 2014ல் கொல்கத்தா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கொல்கத்தா அணிக்கு கேப்டனாக உள்ள கம்பிர் என் திறமையை சரியாக புரிந்து கொண்டார். அதோடு அந்த அணியின் துணை பயிற்சியாளர் எனக்கு நல்ல பயிற்சிகளை தந்ததோடு, அணியில் விளையாட வழிவகை செய்தார்.

தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்றால் அதற்கு கம்பிர் தலைமையில் விளையாடிது தான் காரணம். என் திறமையை மேலும் மேம்படுத்தி உலகக் கோப்பை 2019 போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்க முயல்வேன். அப்படி அதில் இடம்கிடைத்தால், அதற்கு கம்பிர் தந்த சில ஆலோசனைகள் தான் காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்